2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

கொஸோவாவிடம் தோற்ற சுவீடன்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், கொஸோவாவில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் சுவீடன் தோற்றது.

கொஸோவா சார்பாக எல்விஸ் றெஜ்பேஜ்ஜாய், வெடட் முரிக்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை ஹங்கேரியில் நடைபெற்ற இஸ்ரேலுடனான போட்டியில் 5-4 என்ற கோல் கணக்கில் இறுதி நேரத்தில் இத்தாலி வென்றது. இத்தாலி சார்பாக மொய்ஸே கீன் இரண்டு கோல்களையும், மட்டியோ பொலிட்டானோ, ஜியகொமோ றஸ்படோரி, சன்ட்ரோ டொனாலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். இஸ்ரேல் சார்பாக டொர் பெரேட்ஸ் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, மற்றைய இரண்டு கோல்களும் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிரேக்கத்தில் நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியை 3-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வென்றது.

இது தவிர, தம்நாட்டில் நடைபெற்ற ஸ்லோவேனியாவுடனான போட்டியை 3-0 என்ற கோல் கணக்கில் சுவிற்ஸர்லாந்து வென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .