Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூலை 01 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து விராட் கோலியுடன் இணைந்து இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மாவும் ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 37 வயதான ஷர்மா, 159 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 100 பந்துகளில் 140.89 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 4,231 ஓட்டங்களைப் பெற்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் மற்றும் அதிக சதங்களாக ஐந்து சதங்களைப் பெற்றவராக ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரையும் வென்ற ஷர்மா, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவாவேன் எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
19 minute ago
20 minute ago