Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் இந்தியன் பிறீமியர் லீக் பருவகாலத்தில் பங்கேற்கவுள்ள புதிய அணிகளில் ஒன்றான ராஜ்கோட்டின் தலைவராக இந்திய அணியின் துடுப்பாட்டவீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி ராஜ்கோட் அணியானது குஜராத் லயன்ஸ் என அழைக்கப்படவுள்ளது. தவிர, அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்டவீரர் பிராட் ஹொட்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி ராஜ்கோட் அணியை வாங்கிய இன்டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கேஷவ் பன்சாலே, மேற்படி விடயங்களை இன்று செவ்வாய்க்கிழமை (02) டெல்லியில் வைத்து வெளியிட்டார்.
இந்த குஜராத் லயன்ஸ் அணியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பிரெண்டன் மக்கலம், மேற்கிந்தியத்தீவுகளின் சகலதுறைவீரர் டுவைன் பிராவோ, இந்திய அணியின் சகலதுறை வீரர் இரவீந்திர ஜடேஜா, அவுஸ்திரேலிய அணியின் சகலதுறைவீரர் ஜேம்ஸ் போக்நர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், இடைக்காலத்தடை விதிக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
மேலதிகமாக குஜராத் அணியில் உள்வாங்கப்படவுள்ள வீரர்கள், எதிர்வரும் சனிக்கிழமை (06) இடம்பெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். குழாமில் 18 இந்தியவீரர்களையும் 9 வெளிநாட்டு வீரர்களையும் கொண்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago