Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊக்கமருந்துப் பாவனைக்காகத் தடை செய்யப்பட்ட தடகள வீரர்கள் இருவரின் குற்றச்சாட்டை, கென்ய தடகளச் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஐசாக் மவாங்கி நிராகரித்துள்ளார்.
முன்னதாக, கருத்துத் தெரிவத்திருந்த கென்ய தடகள வீரர்களான ஜோய் சகாரி, பிரான்சிஸ்கோ கொகி முனுங்கோ, தங்களது 4-வருடத் தடையை, 2 வருடங்களாகக் குறைப்பதற்கு, தங்களிடம் தலா 24,000 ஐக்கிய அமெரிக்க டொலர் இலஞ்சத்தை, ஐசாக் கேட்டதாகத் தெரிவித்திருந்தனர்.
எனினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐசாக், ஊக்கமருந்துப் பாவனை தொடர்பான தண்டனை, மிகவும் நியமமானது எனவும் அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
'இக்குற்றச்சாட்டு, வெறும் புனைவே. ஏனெனில், ஊக்கமருந்து தொடர்பாக நீங்கள் அகப்பட்டால், அதற்கான தண்டனை மிகவும் நியமமானது. தண்டனையைக் குறைப்பதற்காகப் பணம் கோரப்பட்டது எனச் சிலர் சொல்வது சுவாரசியமானது. ஏனெனில், ஒருவரது குற்றம் நிரூபணமான பின், அவருக்கான தண்டனையில் கென்ய தடகளச் சம்தேளனம் ஆதிக்கம் செலுத்த முடியாது" எனத் தெரிவித்தார்.
இந்த இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஊக்கமருந்துக்கெதிரான அமைப்பு, இவை குற்றச்சாட்டுகளே எனவும், இவை குறித்து மேலதிகமாக அறிய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago