Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட் போட்டிகளில் முறையற்ற பந்துகளைக் (நோ போல்) கண்டுபிடிப்பதற்கான புதிய முறைமையொன்றை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்தவுள்ளது.
இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையில் புதன்கிழமை (24) ஆரம்பிக்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலேயே இந்த முறை பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, பந்துவீச்சாளரொருவர், பந்தை முறையற்ற விதமாக (நோ போல்) வீசுவாராயின், தொலைக்காட்சி நடுவர் (3ஆவது நடுவர்) அதை உடனடியாக அவதானித்து, களத்திலுள்ள நடுவருக்கு அறிவிப்பார். இவ்வாறு களத்திலுள்ள நடுவருக்கு அறிவிப்பதற்காக, கைக்கடிகாரம் போன்றதொரு பயன்படுத்தப்படும். முறையற்ற பந்து வீசப்பட்டதாக மூன்றாவது நடுவர் தீர்மானித்து அறிவிக்கும் போது, கள நடுவர் அணிந்திருக்கும் அக்கருவி அதிரும். அவ்வாறு அதிர்ந்தால், அது முறையற்ற பந்து என, கள நடுவர் அறிவிப்பார்.
இந்த அறிவிப்பை விடுப்பதற்காக, மூன்றாவது நடுவருக்கு, 4 திரைகளில் உடனடியாக மறு ஒளிபரப்புகள் காண்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
முறையற்ற பந்துகளைக் கள நடுவர்கள் சரியாகக் கணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில், அக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவே இம்முறை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago