Shanmugan Murugavel / 2016 ஜனவரி 26 , மு.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு, 20 வருடத் தடை விதிப்பதாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான ராம் ஸ்லாம் தொடரில் போட்டிகளை நிர்ணயிக்க முனைந்தமை அல்லது முயன்றமை என்ற குற்றச்சாட்டிலேயே, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டி நிர்ணய விசாரணைகள் தொடர்பான அறிவிப்பு, கடந்தாண்டு நவம்பரிலேயே வெளியிடப்பட்ட போதிலும், இவ்வாண்டிலேயே, அவரது பெயர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், குறித்த குற்றங்களை ஏற்று அவர் வழங்கிய வாக்குமூலத்தின் காரணமாகவும், அவருக்கெதிராகக் காணப்படும் போதுமான ஆதாரங்கள் காரணமாகவும், அவருக்கு 20 வருடத்தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கான தடை விதிக்கப்பட்டாலும், அவர் மீதான விசாரணைகள் தொடருமெனத் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, குற்றவியல் விசாரணைகளுக்கு அவர் உள்ளாக வேண்டியேற்படும் என்றவாறான சமிக்ஞையையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago