Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளின் காலிறுதிப் போட்டிகளுக்கான அணிகளின் இடங்கள் முடிவாகியுள்ளன.
குழு 'டி"க்காக இடம்பெற்ற போட்டியில், பிரான்ஸை அயர்லாந்து அணி 24-9 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து, அக்குழுவுக்கான முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
அக்குழுவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில், றோமானியாவை எதிர்கொண்ட இத்தாலி அணி, 32-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டதோடு, அடுத்த உலகக் கிண்ணத்தில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தியது.
குழு 'சி"க்கான போட்டியில், ஆர்ஜென்டின, நமீபிய அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆர்ஜென்டி அணி 64-19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, இரண்டாமிடத்தை உறுதிப்படுத்தி, காலிறுதிக்குத் தகுதிபெற்றது.
குழு 'பி"க்கான போட்டியில், ஐக்கிய அமெரிக்காவை எதிர்கொண்ட ஜப்பான், 28-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, குழுவின் மூன்றாமிடத்தை உறுதிப்படுத்தி, அடுத்த உலகக் கிண்ணத்துக்கான இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, அவுஸ்திரேலிய, வேல்ஸ் அணிகள் குழு 'ஏ"இலிருந்தும், தென்னாபிரிக்க, ஸ்கொட்லாந்து அணிகள் குழு 'பி"இலிருந்தும், நியூசிலாந்து, ஆர்ஜென்டி அணிகள் குழு 'சி"இலிருந்தும், அயர்லாந்து, பிரான்ஸ் அணிகள் குழு 'டி"இலிருந்தும் காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.
இதன்படி, தென்னாபிரிக்கா - வேல்ஸ், நியூசிலாந்து - பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டிகள், 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், அயர்லாந்து - ஆர்ஜென்டின, அவுஸ்திரேலியா - ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டிகள், 18ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago