Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணிக்கும், கிறிஸ்டல் பலஸுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேம்ஸ் றொட்றிகாஸ் பெற்றதோடு, கிறிஸ்டல் பலஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிச்சி பச்சுவாய் பெற்றிருந்தார்.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 74 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியுள்ளது. 60 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 56 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும், 52 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும் காணப்படுகின்றன.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago