Editorial / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான செல்சியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணிக்கும் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணிக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியின் 36ஆவது நிமிடத்தில், தமதணியின் சீஸர் அத்பிலிகெட்டா பெற்ற கோல் மூலம் செல்சி முன்னிலை பெற்றபோதும், 70ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் ஸ்கேவியர் பெர்ணான்டஸ் களமிறங்கிய மூன்றாவது நிமிடத்தில் பெற்ற கோல் காரணமாக 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற செளதாம்டன் அணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, டனி வெல்பக் இரண்டு கோல்களையும் பியரி எம்ரிக் அபுமெயாங் ஒரு கோலையும் பெற்றதோடு, செளதாம்டன் சார்பாக, ஷேன் லொங், சார்லி ஒஸ்டின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026