Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேறறிரவு நடைபெற்ற செக் குடியரசுக் கழகமான ஸ்லாவியா பிராக்குடனான குழு எஃப் போட்டியொன்றை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா முடித்துக் கொண்டது.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஒஸ்திரியக் கழகமான ஆர்.பி ஸல்ஸ்பேர்க்குடனான குழு ஈ போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி சமநிலையில் முடித்துக் கொண்டிருந்தது. நாப்போலி சார்பாக ஹிர்விங் லொஸானோவும், சல்ஸ்பேர்க் சார்பாக எர்லிங் ஹலான்ட்டும் கோல்களைப் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுடனான குழு எஃப் போட்டியொன்றை 3-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் வென்றது. டொட்டமுண்ட் சார்பாக, அஷ்ரஃப் ஹக்கிமி இரண்டு கோல்களையும், ஜூலியன் பிரான்ட் ஒரு கோலையும் பெற்றனர். இன்டர் மிலன் சார்பாக, லொட்டரோ மார்ட்டின்ஸ், மத்தியாஸ் வெசினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸுடனான குழு எச் போட்டியொன்றை 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி முடித்துக் கொண்டிருந்தது. செல்சி சார்பாக, ஜோர்ஜினோ இரண்டு கோல்களையும், சீஸர் அத்பிலிகெட்டா, றீஸ் ஜேம்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அஜக்ஸ் சார்பாக, குயின்ஸி ப்றோமெஸ், டொனி வான் டீ பீக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய இரண்டு கோல்களும் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவுடனான குழு ஜி போட்டியொன்றை 3-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோன் வென்றது. லயோன் சார்பாக, ஜோச்சிம் அன்டர்சன், மெம்பிஸ் டிபே, பெர்டான்ட் டரோரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பெய்பிக்கா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரீஸ் செஃபெரோவிச் பெற்றிருந்தார்.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியுடனான குழு எச் போட்டியொன்றில் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியா வென்றது. வலென்சியா சார்பாக, டானியல் பரெஜோ, ஜொஃப்ரி கொன்டொக்பியா, பெரன் டொரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஓவ்ண் கோல் முறையில் ஒரு கோல் கிடைக்கப்பெற்றிருந்தது. லில்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை விக்டர் ஒசிம்ஹென் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற பெல்ஜியக் கழகமான கே.ஆர்.சி ஜெங்க்குடனான குழு ஈ போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, ஜோர்ஜினியோ விஜ்னால்டும், அலெக்ஸ் ஒக்ஸ்லெட்-சம்பர்லின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கே.ஆர்.சி ஜெங்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை எம்வானா சமட்டா பெற்றிருந்தார்.
இதேவேளை, ரஷ்யக் கழகமான ஸெனிட் சென். பீற்றர்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஜி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக் வென்றது. ஆர்.பி லெய்ஸிக் சார்பாக, டியகோ டெம்மே, மார்செல் சபிட்ஸர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்
15 minute ago
40 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
5 hours ago
27 Jan 2026