Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 29 , மு.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற லிவர்பூலுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது.
லிவர்பூல் சார்பாக வேர்ஜில் வான் டிஜிக், மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஆர்சனல் சார்பாக புகாயோ ஸாகா, மிகேல் மெரினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை கிறிஸ்டல் பலஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது. பலஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜீன்-பிலிப் மடெடா பெற்றிருந்தார்.
இந்நிலையில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago