Shanmugan Murugavel / 2021 ஜனவரி 04 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஜெனோவாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், லேஸியோவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சிரோ இம்மொபைலி பெற்றதோடு, ஜெனோவா சார்பாகப் பெறப்பட்ட கோலை மத்தியா டெஸ்றோ பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 37 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஏ.சி மிலன் காணப்படுகின்றது. 36 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இரண்டாமிடத்தில் இன்டர் மிலனும், 30 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றோமாவும், 28 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நாப்போலியும் காணப்படுகின்றன. றோமாவை விட ஒரு போட்டி குறைவாகவே நாப்போலி விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 27 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் காணப்படுகின்றது. ஜுவென்டஸும் றோமாவை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026