2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ்

Editorial   / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய உள்ளூர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடராக பிக் பாஷ் லீக்கில், 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான சம்பியனாக அடிலெய்ட் ஸ்ரைக்கஸ் தெரிவானது.  அடிலெய்ட்டில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஹோபார்ட் ஹரிகேன்ஸை 25 ஓட்டங்களால் வென்றமையையடுத்தே அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் சம்பியனானது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸின் அணித்தலைவர் ட்ரெவிஸ் ஹெட், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ், 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜக் வெதர்லான்ட் 115 (70), ட்ரெவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 44 (29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டானியல் கிறிஸ்டியன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு, 203 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், டார்சி ஷோர்ட் 68 (44), அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி 46 (33), டானியல் கிறிஸ்டியன் ஆட்டமிழக்காமல் 29 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பீற்றர் சிடில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக ஜேக் வெதர்லான்டும் தொடரின் நாயகனாக டார்சி ஷோர்ட்டும் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .