Editorial / 2018 மே 10 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரில் ஜுவென்டஸ் சம்பியனானது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஏ.சி மிலன் அணியை வென்றே ஜுவென்டஸ் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியின் முதற்பாதியில் கோலெதுவும் பெறப்படாத நிலையில், போட்டியின் 56ஆவது நிமிடத்தில் மிரலெம் பிஜானிக் கொடுத்த பந்தை மெட்ஹி பெனடியா கோலாக்க ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது. பின்னர் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், ஏ.சி மிலனின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி டொனாருமா வழமையாகத் தடுத்திருக்க வேண்டிய பந்தை தவறவிட, டக்ளஸ் கொஸ்டா கோலொன்றைப் பெற ஜுவென்டஸின் முன்னிலை இரட்டிப்பானது.
அடுத்த மூன்றாவது நிமிடத்தில், மரியோ மண்டூஸிக் தலையால் முட்டிய பந்தை ஜல்லூயிஜி டொனாருமா பிடிக்கத் தவற, அதை மெட்ஹி பெனடியா கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற ஜுவென்டஸ், போட்டியின் 76ஆவது நிமிடத்தில் மிரலெம் பிஜானிக்கின் மூலையுதையை ஏ.சி மிலனின் நிக்கொல கலினிக் தனதணியின் கோல்கம்பத்துக்குள் செலுத்தியதோடு போட்டியின் இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஜுவென்டஸ், தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் மொத்தாம 13ஆவது தடவையாகவும் கோப்பா இத்தாலியா தொடரில் சம்பியனானது.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago