Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 04 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்கள் டென்னிஸ் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அஷ்லெய் பார்ட்டி சம்பியனானார்.
சீனாவின் ஷென்ஸானில் நடைபெற்றுவந்த இத்தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்புச் சம்பியனான எலினா ஸ்விட்டொலினாவை வென்றே அவுஸ்திரேலியாவின் பார்ட்டி சம்பியனாகியிருந்தார்.
உலகின் தற்போதைய ஆறாம்நிலை வீராங்கனையான ஸ்விட்டோலினாவுடனான இதற்கு முன்னரான ஐந்து போட்டிகளிலும் தோற்றிருந்த பார்ட்டி, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் குறித்த போட்டியில் வென்றிருந்தார்.
அந்தவகையில், இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் எட்டாமிடத்தில் காணப்பட்டிருந்த உக்ரேனின் ஸ்விட்டொலினா, இறுதிப் போட்டி வரை முன்னேறியதைத் தொடர்ந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்திருந்தார்.
இத்தொடரின் தனது அரையிறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பார்ட்டி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
தனது அரையிறுதிப் போட்டியில் உலகின் தற்போதைய எட்டாம்நிலை வீராங்கனையான சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை எதிர்கொண்டிருந்த ஸ்விட்டொலினா முதலாவது செட்டை 5-7 என இழந்திருந்தபோதும், இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் 4-1 என ஸ்விட்டொலினா முன்னிலையில் இருந்தபோது உபாதை காரணமாக போட்டியிலிருந்து பென்சிச் விலகியிருந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு ஸ்விட்டொலினா தகுதிபெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago