2025 ஜூன் 28, சனிக்கிழமை

சம்பியன்களை வீழ்த்திய இன்டர் மிலன்

Shanmugan Murugavel   / 2021 மே 16 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியக் கால்பந்தாடக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஜுவென்டஸின் மைதானத்தில் நேற்றிரவு அவ்வணிக்கும், சம்பியனான இன்டர் மிலனுக்குமிடையிலான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.

ஜுவென்டஸ் சார்பாக, ஜுவான் குராடோ இரண்டு கோல்களையும், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலையும் பெற்றனர். மிலன் சார்பாக, றொமெலு லுக்காக்கு ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் முறையில் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றோமா வென்றது. றோமா சார்பாக, ஹென்றிக் மிகித்திரயான், பெட்ரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 88 புள்ளிகளுடன் முதலாமிடத்திலுள்ளது. 78 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லாண்டாவும், 75 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஏ.சி மிலனும், அதே புள்ளிகளைப் பெற்றிருந்தபோதும், கோலெண்ணிக்கை அடிப்படையில் நான்காமிடத்தில் ஜுவென்டஸ் உள்ளது. இதில், ஏ.சி மிலன் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .