Shanmugan Murugavel / 2026 மார்ச் 11 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில், துருக்கியக் கழகமான கலடசரேயின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தோற்றது.
கலடசரே சார்பாகப் பெறப்பட்ட கோலை மரியோ லெமினா பெற்றிருந்தார்.
இந்நிலையில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லமீன் யமால் பெற்றதோடு, நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹார்வி பார்ன்ஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியை 5-2 என்ற கோல் கணக்கில் லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றதோடு, இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 6-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது.
29 minute ago
5 hours ago
7 hours ago
11 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
5 hours ago
7 hours ago
11 Mar 2026