Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டுக்கும் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றிக்குமிடையே மன்செஸ்டர் சிற்றி அணியின் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
மேற்படி போட்டியில் காயம் காரணமாக றியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்காத நிலையில், அவ்வணியால் வழமை போன்று கோல் பெறும் வாய்ப்புகளை உருவாக்க முடிந்திருக்கவில்லை.
எனினும் போட்டியின் இறுதிக்கணங்களில் ஜெஸி தலையால் முட்டிய பந்து ஒன்று கோல்கம்பத்தில் பட்டு சென்றிருந்ததுடன், கஸ்மெய்ரோ, பெப்பே அடித்த பந்துகளை மன்செஸ்டர் சிற்றியின் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட் அபாரமாக தடுத்திருந்த நிலையில் எவ்வித கோல் பின்னடைவுமில்லாமல் எதிர்வரும் புதன்கிழமை (04) றியல் மட்ரிட் அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ள இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ளது.
மன்செஸ்டர் சிற்றி சார்பாக, மேலதிக நேரத்தில் கிடைக்கப்பெற்ற பிறீ கிக் ஒன்றின் மூலம் கெவின் டீ ப்ரூன் கோல்கம்பத்தினை நோக்கி பந்தை அடித்திருந்த போதும் றியல் மட்ரிட்டின் கெய்லர் நவாஸ் அதைத் தடுத்திருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக மன்செஸ்டர் சிற்றியின் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .