Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரின், இறுதிப் பதினாறு அணிகளுக்கான சுற்றில், கடந்த புதன்கிழமை (24), இங்கிலாந்தின் மன்செஸ்டர் சிற்றிக்கும் உக்ரேனின் டைனமோ கீவ் அணிக்குமிடையே உக்ரேனில் இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றுள்ளது.
மன்செஸ்டர் சிற்றிக்கும் டைனமோ கீவ் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் மன்செஸ்டர் சிற்றி, 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. சிற்றி சார்பாக, போட்டியின் 15ஆவது நிமிடத்தில் சேஜியோ அக்ரோவும் 40ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வாவும் போட்டியின் இறுதி நிமிடத்தில் யாயா தோரேயும் கோல்களைப் பெற்றிருந்தார்.
வழமையாக வலது முன்கள வீரராக சிற்றியின் பயிற்சியாளர் மனுவல் பெல்லேகிரினியால் பயன்படுத்தப்படும் டேவிட் சில்வா, இப்போட்டியில், முன்கள தாக்குதல் வீரர் சேஜியோ அக்ரோவுக்கு பின்னே பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேற்படி நகர்வானது சிற்றிக்கு பாரிய அனுகூலத்தை வழங்கியிருந்தது. வலது முன்கள வீரராக பெர்னாண்டின்ஹோ செயற்பட்டிருந்தார். மத்திய களத்தை யாயா தோரேயும் பெர்னாண்டோவும் கவனித்துக் கொண்டனர்.
இதேவேளை இப்போட்டியின் இரண்டாவது பாதியில், சிற்றியின் தலைவர் வின்சென்ட் கொம்பனி களம்புகுந்திருந்தார். காயம் காரணமாக ஏழு வாரங்கள் போட்டிகளிலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர், அவர் பங்குபற்றும் இரண்டாவது போட்டி இதுவாகும்.
இப்போட்டியின் நாயகனாக டேவிட் சில்வா தெரிவாகியிருந்தார்.
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago