2025 மே 19, திங்கட்கிழமை

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்த விடுப்பைக் கோரியுள்ள ஷகிப்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 08 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து விடுப்பொன்று தேவைப்படுவதாக பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தவறவிடுவதாக பங்களாதேஷின் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நடவடிக்கைகள் தலைவர் ஜலால் யூனுஸுக்கு இனங்காட்டியுள்ள  அல் ஹஸன், டெஸ்ட் தொடருக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராவது போன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாம்களில் அல் ஹஸன் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கெதிரான தொடரின்போது பயணியொருவராகவே காணப்பட்டது போல உணர்ந்ததாக அல் ஹஸன் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X