Shanmugan Murugavel / 2016 மார்ச் 02 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில், செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் செல்சி, எவேர்ட்டன், ஏ.எப்.சி போர்ன்மெத் அணிகள் வெற்றிபெற்றன.
செல்சி அணிக்கும் நோர்விச் சிற்றி அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், முதலாவது நிமிடத்திலேயே செல்சியின் கெனெடி பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன், செல்சி அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்தும் அவ்வணி சிறப்பாக விளையாடிய போதிலும், முதலாவது பாதியின் இறுதியில் சர்ச்சைக்குரிய விதத்திலேயே கோலொன்றைப் பெற்றது.
செல்சியின் டியகோ கொஸ்டா, ஓப்-சைட் பகுதியிலிருந்து வந்து, கோலொன்றைப் பெற்றார். அந்தக் கோலை, ஓப்-சைட் கோல் என போட்டி மத்தியஸ்தர் அறிவிக்காத நிலையில், 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணி முன்னிலை வகித்தது.
பின்னர், போட்டியின் 68ஆவது நிமிடத்தில், நோர்விச் சிற்றி அணியின் நேதன் றெட்மொன்ட், கோலொன்றைப் பெற்ற போதிலும், பின்னர் கோல்கள் எவையும் பெறப்படாமையால், 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி அணி வெற்றிபெற்றது.
ஏனைய போட்டிகளில், ஏ.எப்.சி போர்ன்மெத் அணியும் சௌதம்டன் அணியும் மோதிய போட்டியில் ஏ.எப்.சி போர்ன்மெத் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. எவேர்ட்டன் அணியும் அஸ்டன் வில்லா அணியும் மோதிய போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் எவேர்ட்டன் அணி வெற்றிபெற்றது. லெய்செஸ்டர் சிற்றி அணியும் வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணியும் மோதிய போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. சண்டர்லான்ட் அணியும் கிறிஸ்டல் பலஸ் அணியும் மோதிய போட்டியும், 2-2 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .