Freelancer / 2023 செப்டெம்பர் 07 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 எனும் ஆட்டக்கணக்கில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி தொடரை தீர்மானிக்கும் ஒன்றாய் அமைந்திருந்தது.
இங்கிலாந்தின் Derby நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை பெற்றது.
117 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி, 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை அடைந்தது.
இதற்கமைய, இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை 2 க்கு 1 எனும் ஆட்டக்கணக்கில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றியது. R
8 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Jan 2026