Editorial / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் குரான் பிறீயை, சக பெராரி அணி மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க்கைத் தாண்டி பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியல் வெட்டல் வென்றார்.
நேற்று நடைபெற்ற இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்து பந்தயத்தில் முன்னிலை வகித்த சார்ள்ஸ் லெக்கலெர்க்கை, பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த செபஸ்டியன் வெட்டல் முன்னரே டயர்களை மாற்றுவதற்காக தனது காரை நிறுத்தியதன் மூலம் சார்ள்ஸ் லெக்கலெர்க்கைத் தாண்டி முதலிடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், சார்ள்ஸ் லெக்கலெர்க் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்த நிலையில், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார். நான்காம், ஐந்தாம் இடங்களை மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் ஆகியோர் பெற்றிருந்தனர்.
அந்தவகையில், நடப்பு ஃபோர்மியுலா வண் சம்பியனான லூயிஸ் ஹமில்டன், இன்னும் ஆறு பந்தயங்கள் மீதமிருக்கையில், நடப்பு ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலிருக்கும் வல்டேரி போத்தாஸுக்கும் தனக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை 65 ஆக அதிகரித்துக் கொண்டுள்ளார். முதலாமிடத்தில் 296 புள்ளிகளுடன் லூயிஸ் ஹமில்டன் காணப்படுகின்ற நிலையில், 231 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் வல்ட்டேரி போத்தாஸ் காணப்படுகின்றார்.
இதேவேளை, மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களில் முறையே 200, 200, 194 புள்ளிகளுடன் சார்ள்ஸ் லெக்கலெர்க், மக்ஸ் வெர்ஸ்டப்பன், செபஸ்டியன் வெட்டல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
46 minute ago
53 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
57 minute ago
2 hours ago