2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

சின்னரை வீழ்த்தியதையடுத்து முதலாமிடத்தில் அல்கரஸ்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 09 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் முதல்நிலை வீரராகவிருந்த ஜனிக் சின்னரை வீழ்த்தி சம்பியனானதையடுத்து முதலாமிடத்துக்கு ஸ்பெய்னின் கார்லோஸ் அல்கரஸ் முன்னேறியுள்ளார்.

இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை திங்கட்கிழமை (08) தரப்படுத்தல் இற்றைப்படுத்தலில் அல்கரஸ் அடைந்துள்ளார். இத்தாலியின் சின்னர் முதலாமிடத்திலிருந்து ஓரிடம் கீழிறங்கி இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார்.

இதேவேளை அரையிறுதிப் போட்டி வரையில் ஐ. அமெரிக்க பகிரங்கத் தொடரில் முன்னேறிய சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், ஏழாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

இந்நிலையில் ஐ. அமெரிக்க பகிரங்கத் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஐ. அமெரிக்காவின் அமந்தா அனிசிமோவா, ஒன்பதாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி பெண்களுக்கான தனிநபர் தரவரிசையில் நான்காமிடத்தையடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X