Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை சிம்பாப்வேயும் வென்றிருந்த நிலையில், ஹராரேயில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரை இலங்கை கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிம்பாப்வே, தடிவனஷே மருமனியின் 51 (44), அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் 28 (18), றயான் பேர்ளின் 26 (15), ஷோன் வில்லியம்ஸின் 23 (11), தஷிங்கா முசெகிவாவின் 18 (11), டொனி முயொங்காவின் ஆட்டமிழக்காத 13 (09), பிரயன் பென்னிட்டின் 13 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், துஷான் ஹேமந்த 4-0-38-3, துஷ்மந்த சமீர 4-0-33-2, சரித் அசலங்க 3-0-19-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 192 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, கமில் மிஷாரவின் ஆட்டமிழக்காத 73 (43), குசல் பெரேராவின் ஆட்டமிழக்காத 46 (26), பதும் நிஸங்கவின் 33 (20), குசல் மென்டிஸின் 30 (17) ஓட்டங்களோடு 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ராசா 4-0-29-1, பிராட் இவான்ஸ் 3-0-28-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக மிஷாரவும், தொடரின் நாயகனாக சமீரவும் தெரிவாகினர்.
5 minute ago
11 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
26 minute ago
37 minute ago