Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மே 01 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டை இனிங்ஸால் பாகிஸ்தான் வென்றது.
ஹராரேயில், நேற்று முன்தினம் ஆரம்பமான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், குறித்த டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றோய் கையா 48, டொனால்ட் ட்ரிபானோ ஆட்டமிழக்காமல் 28, மில்டன் ஷும்பா 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹஸன் அலி, ஷகீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் தலா 4, நெளமன் அலி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சகல விக்கெட்டுகளையும் இழந்து 426 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பவட் அலாம் 140, இம்ரான் பட் 91, அபிட் அலி 60, மொஹமட் றிஸ்வான் 45, அஸார் அலி 36, ஹஸன் அலி 30 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பிளஸிங் முஸர்பனி 4, டொனால்ட் ட்ரிபானோ 3, றிச்சர்ட் நகரவா 2, தென்டாய் சிஸோரோ ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களையே பெற்று இனிங்ஸ் மற்றும் 116 ஓட்டங்களால் இன்று தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், தரிசாய் முஸுகன்டா 43, பிரெண்டன் டெய்லர் 29, கெவின் கஸூஸா 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹஸன் அலி 5, நெளமன் அலி 2, பாஹீம் அஷ்ரஃப் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஹஸன் அலி தெரிவானார்.
20 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
29 minute ago