Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஹராரேயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, வரிசையாக மொஷாடெக் ஹொஸைனிடம் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் சிகண்டர் ராசாவின் 62 (53), றயான் பேர்ளின் 32 (31) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை சிம்பாப்வே பெற்றது.
பதிலுக்கு, 139 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், லிட்டன் தாஸின் 56 (33) ஓட்டங்களோடு 17.3 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக மொஷாடெக் ஹொஸைன் தெரிவானார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026