Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஹோபார்ட்டில் இன்று நடைபெற்ற சிம்பாப்வேயுடனான முதலாவது சுற்று குழு பி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் நிக்கலஸ் பூரான், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ஜோன்ஸன் சார்ள்ஸ் 45 (36), றொவ்மன் பவல் 28 (21), அகீல் ஹொஸைன் ஆட்டமிழக்காமல் 23 (18) ஓட்டங்களைப் பெற்றபோதும் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த நிலையில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை அவ்வணி பெற்றது. பந்துவீச்சில், சிகண்டர் ராசா 4-0-19-3, ஷோன் வில்லியம்ஸ் 3-0-17-1, றிச்சர்ட் நகரவா 3-0-20-0, டென்டாய் சட்டரா 3-0-22-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 154 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அதிரடியாக ஆரம்பித்திருந்தாலும், அல்ஸாரி ஜோசப், ஒபெட் மக்கோய், ஜேஸன் ஹோல்டர் (3), ஒடியன் ஸ்மித், அகீல் ஹொஸைனிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18.2 ஓவர்களில் 122 ஓட்டங்களையே பெற்று 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக அல்ஸாரி ஜோசப் தெரிவானார்.
இந்நிலையில, முன்னர் நடைபெற்ற ஸ்கொட்லாந்துக்கெதிரான முதலாவது சுற்று குழு பி போட்டியில் அயர்லாந்து வென்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஸ்கொட்லாந்து
ஸ்கொட்லாந்து: 176/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிஷெல் ஜோன்ஸ் 86 (55), றிச்சி பெரிங்டன் 37 (27), மத்தியூ குறொஸ் 28 (21), மிஷெல் லீஸ்க் ஆ.இ 17 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: கேர்ட்டிஸ் கம்பர் 2/9 [2], மார்க் அடைர் 1/23 [4], ஜொஷ் லிட்டில் 1/30 [4], சிமி சிங்க் 0/16 [2])
அயர்லாந்து: 180/4 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேர்ட்டிஸ் கம்பர் ஆ.இ 72 (32), ஜோர்ஜ் டொக்ரல் ஆ.இ 39 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரட் வேல் 1/25 [4], மிஷெல் லீஸ்க் 1/16 [2])
போட்டியின் நாயகன்: கேர்ட்டிஸ் கம்பர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025