Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளரான பெப் குவார்டியோலா, எதிர்வரும் 2023ஆம் ஆண்டுடன் சிற்றியை விட்டு விலகுவார் எனக் கூறப்படுகிறது.
குவார்டியோலாவுடனான சிற்றியின் ஒப்பந்தமானது 2023ஆம் ஆண்டுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கால்பந்தாட்டத்துக்குள் செல்ல முதல் இடைவெளி ஒன்றை எடுக்க குவார்டியோலா விரும்புகின்ற நிலையிலேயே, 2023ஆம் ஆண்டுடன் சிற்றியை விட்டு விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிற்றியுடன் மூன்று பிறீமியர் லீக்குகளை வென்றுள்ள குவார்டியோலா, தனது முன்னாள் கழகங்களான ஜேர்மனியின் புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவில் முகாமையாளராக தலா மூன்று புண்டெஸ்லிகா, லா லிகா பட்டங்களைக் கைப்பற்றியிருந்தார். தவிர, பார்சிலோனாவுடன் இரண்டு தடவைகள் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கையும் வென்றிருந்தார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026