Shanmugan Murugavel / 2021 மார்ச் 08 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
யுனைட்டெட் சார்பாக, புரூனோ பெர்ணான்டஸ், லுக் ஷா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, நடப்புச் சம்பியன்கள் லிவர்பூலின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், புல்ஹாமுக்குமிடையிலான போட்டியில், 0-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது. புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை மரியோ லெமினா பெற்றிருந்தார்.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 65 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சிற்றி உள்ளது. இரண்டாமிடத்தில் 54 புள்ளிகளுடன் யுனைட்டெட்டும், மூன்றாமிடத்தில் 53 புள்ளிகளுடன் லெய்செஸ்டர் சிற்றியும், நான்காமிடத்தில் 47 புள்ளிகளுடன் செல்சியுள்ளது. இதில், மற்றைய அணிகளை விட செல்சி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
7 minute ago
20 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
31 minute ago
2 hours ago