Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில், சுப்பர் ஓவரில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லியின் அணித்தலைவர் றிஷப் பண்ட், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி, பிறித்திவி ஷாவின் 53 (39), ஷீகர் தவானின் 28 (26), றிஷப் பண்டின் 37 (27), ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டமிழக்காத 34 (25) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜெ. சுஷிந்த், நான்கு ஓவர்களில் 21 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்ததுடன், விஜய் ஷங்கர் மூன்று ஓவர்களில் 19 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தார். சிதார்த் கோல், நான்கு ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ரஷீட் கான் நான்கு ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 160 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சண்றைசர்ஸ், ஆவேஷ் கான், அக்ஸர் பட்டேல், அமித் மிஷ்ராவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும், ஜொனி பெயார்ஸ்டோவின் 38 (18), கேன் வில்லியம்சனின் ஆட்டமிழக்காத 66 (51), ஜெ. சுஷிந்தின் ஆட்டமிழக்காத 14 (06) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஆவேஷ் கான் நான்கு ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் பட்டேல் நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அமித் மிஷ்ரா நான்கு ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெடையும் கைப்பற்றினர். இரவிச்சந்திரன் அஷ்வின், நான்கு ஓவர்களில் 27 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அக்ஸர் பட்டேல் வீசிய சுப்பர் ஓவரில் ஏழு ஓட்டங்களை சண்றைசர்ஸ் பெற்ற நிலையில், ரஷீட் கான் வீசிய சுப்பர் ஓவரில் எட்டு ஓட்டங்களைப் பெற்று போட்டியை டெல்லி வென்றது.
இப்போட்டியின் நாயகனாக பிறித்திவி ஷா தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago