Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி சம்பியனானது.
வட அயர்லாந்தின் தலைநகர் பெல்ஃபாஸ்டில் நேற்று அதிகாலை நடைபெற்ற இப்போட்டியில், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் சம்பியன்களான வில்லாறியலை வென்றே ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கின் சம்பியனான செல்சி சம்பியனானது.
இப்போட்டியானது வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மேலதிக நேரத்திலும் அவ்வாறே காணப்பட்டு, பின்னர் பெனால்டியிலேயே 6-5 என்ற ரீதியில் ஸ்பானிய லா லிகா கழகமான வில்லாறியலை வென்று செல்சி சம்பியனாகியிருந்தது.
செல்சி சார்பாகப் பெறப்பட்ட ஹக்கிம் ஸியெச்சும், வில்லாறியல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெரார்ட் மொரேனோவும் பெற்றிருந்தனர்.
ஏழாவது பெனால்டி வரையில் சென்ற நிலையில், இரண்டு உதைகளை செல்சியின் கோப்பாளர் கேபா அரிஸபலகா தடுத்திருந்தார்.
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago