2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் அஷ்வின்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையில் உறுதிப்படுத்தப்படாதபோதும் இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இரவிச்சந்திரன் அஷ்வின் விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்காக சென்னையிலிருந்து 38 வயதான அஷ்வின் விலகுகிறாரென்பது உடனடியாகத் தெரியாதபோதும், தனது விலகும் முடிவை அவர் அணியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையின் அதிகாரிகள், அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி, முன்னாள் அணித்தலைவர் ருத்துராஜ் கைகவாட் உள்ளடங்கலான வீரர்கள் சென்னையில் கடந்த சில நாள்களாக சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.

ஐ.பி.எல்லின் 221 போட்டிகளில் ஓவருக்கு 7.29 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து 187 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஷ்வின், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்தாண்டே சென்னையால் 9.75 கோடி இந்திய ரூபாய்களுக்கு வாங்கப்பட்ட பின்னர் அவ்வணிக்குத் திரும்பியிருந்தார்.

இதேவேளை இன்னொரு ஐ.பி.எல் அணியான ராஜஸ்தான் றோயல்ஸின் அணித்தலைவரான சஞ்சு சாம்சனும் தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .