Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (20) நடைபெற்ற செல்சியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
யுனைட்டெட் சார்பாக ப்ரூனோ பெர்ணாண்டஸ், கஸேமீரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ட்ரெவொஷ் சலோபா பெற்றிருந்தார்.
இந்நிலையில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. டொட்டென்ஹாம் சார்பாக றிஷலிஷன் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. பிறைட்டன் சார்பாக யன்குமா மினெடெஹ், யசின் அயரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago