Editorial / 2018 மே 10 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டிகளில், செவில்லா அணியிடம் றியல் மட்ரிட் அணி தோற்றதுடன், வில்லாறியல் அணியை லா லிகா சம்பியன்களாக தம்மை உறுதிப்படுத்திக்கொண்டுள்ள பார்சிலோனா வென்றது.
செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோல்வியடைந்தது. செவில்லா சார்பாக விஸாம் பென் யெடர், மைக்கல் லயுன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் றியல் மட்ரிட்டின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸின் ஓவ்ண் கோலால் கிடைத்திருந்தது. றியல் மட்ரிட் சார்பாக, பொர்ஜா மயோரல், சேர்ஜியோ றாமோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். இப்போட்டியில் சேர்ஜியோ றாமோஸ் பெனால்டியொன்றை தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாக, உஸ்மான் டெம்பிலி இரண்டு கோல்களைப் பெற்றதோடு, பிலிப் கோச்சினியோ, போலின்ஹோ, லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வில்லாறியல் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலா சன்சொனே பெற்றிருந்தார்.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago