Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 25 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீகா ஆபத்து ஏற்பட்டுள்ள போதிலும், இவ்வாண்டு பிரேஸிலில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள், பாதுகாப்பாக நடைபெறுமென்ற எதிர்பார்ப்பை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் மார்கிரெட் சான் வெளியிட்டுள்ளார்.
நுளம்புகளை ஒழிப்பதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம், சர்வதேச ஒலிம்பிக் இயக்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் பிரேஸில் அரசாங்கம் இணைந்து செயற்பட்டமை தொடர்பாகவும், பிரேஸில் அரசாங்கத்துக்குப் பாராட்டை வெளியிட்ட அவர், ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக நம்பிக்கைகளை வெளிப்படுத்தினார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரேஸிலுக்கு விருந்தினராகவோ, பங்குபற்றுநராகவோ அல்லது விளையாட்டு வீரராகவோ பிரேஸிலுக்குச் செல்லும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், அவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுமெனத் தெரிவித்தார்.
அத்தோடு, அவ்வாறான பாதுகாப்பை வழங்குவதற்கு, பிரேஸில் அரசாங்கத்துக்கு முடியும் என்ற நம்பிக்கையையும், மார்கிரெட் சான் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .