Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 28 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலில் இவ்வாண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகள், சீகா வைரஸைப் பரப்பும் நுளம்பால் கடியுறுவர் என்ற அச்சம் நிலவுகின்ற நிலையில், அதிலிருந்து தப்புவதற்கான சீருடையை, தென்கொரியா தயாரித்துள்ளது.
இதன்படி, ஒலிம்பிக் பங்குபற்றும் வீர, வீராங்கனைகள், முழுக்கையுடைய மேலாடைகளையும் கால்கள் முழுவதையும் மறைக்கின்ற ஆடைகளையும் அணியவுள்ளனர். இதற்கு மேலதிகமாக, அந்த ஆடைகளில், நுளம்புகளை விரட்டும் மருந்துகள் சேர்க்கப்பட்டிருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நுளம்புக்கடியிலிருந்து அவர் தப்பமுடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிகளில் விளையாடும் போது, விளையாடுவதற்கு இலகுவான ஆடைகளே காணப்பட வேண்டுமென்ற நிலையில், பயிற்சிகளில் ஈடுபடும் ஆடைகளும், ஆரம்ப, இறுதி நிகழ்வுகளில் அணியும் ஆடைகளுமே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
விளையாடும் ஆடைகளில், நுளம்புகளை விரட்டும் வடிவில் வடிவமைக்க முடியாது என்பதால், அவற்றில் மாற்றங்களைச் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ள தென்கொரிய தடகளச் சம்மேளனம், எனினும், நுளம்புகளை விரட்டும் மருந்துகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
14 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago