Shanmugan Murugavel / 2016 ஜனவரி 10 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், இத்தொடரில் முதலாவது போட்டியில் பங்குபெறமாட்டார்.
டிம் சௌதியின் இடது காற்பாதத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக, இலங்கைக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் அவரால் பங்குபெற முடியாது போயிருந்த நிலையில், உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கெதிரான போட்டிகளில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இத்தொடரில் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில், சீருடை சம்பந்தமான விதிமுறைகளைப் பின்பற்றாமை காரணமாக, ஒரு போட்டியில் பங்குபற்றுவதற்கு, உமர் அக்மலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இதே வகைக் குற்றத்துக்காக 2 முறை எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், 12 மாதகாலத்துக்குள் அதே தவறைச் செய்ததன் காரணமாக, அவருக்குப் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
59 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago