Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் இடம்பெற்றுவந்த சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிகளில், ஆண்களுக்கான போட்டியில் அன்டி மரே எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தார்.
குரோஷியாவைச் சேர்ந்தவரும் உலகின் 14ஆவது நிலை வீரருமான மரின் சிலிக்கை எதிர்கொண்ட பெரிய பிரித்தானியாவைச் சேர்ந்தவரும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான அன்டி மரே, தொடர்ச்சியாக 22 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில், 23ஆவது போட்டியை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கினார்.
ஆனால், 4-6, 5-7 என்ற செட் கணக்கில் அன்டி மரே அதிர்ச்சித் தோல்வியடைந்திருந்தார். இதன் மூலம், ஏ.டி.பி தொடரில் கடந்த 18 தொடர்களையும் நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர், ரபேல் நடால், அன்டி மரே ஆகியோர் வென்றிருந்தனர் என்ற சாதனையைத் தொடர முடியாது போனது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, தரப்படுத்தலில் 5 இடங்கள் முன்னேறிய சிலிக், 9ஆவது இடத்துக்கு முன்னேறினார்
59 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
6 hours ago