Shanmugan Murugavel / 2016 ஜூன் 15 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, சிம்பாப்வே அணிகளுக்கிடையில் சிம்பாப்வேயில் இடம்பெற்று வந்த மூன்று, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில், மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, இரண்டாவது, மூன்றாவது விக்கெட்டுகளை இழந்தபோது, முறையே 55, 89 ஓட்டங்களைப் பெற்றிருந்த போதும் 32.5, 32.6, 33.1, 33.2 ஆகிய ஓவர்களில் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக, 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில், சிம்பாப்வே அணி சார்பாக வுசி சிபண்டா 38 ஓட்டங்களையும் சமு சிபாபா 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக ஜஸ்பிறிட் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சஹால் இரண்டு விக்கெட்டுகளையும் தவால் குல்கர்னி, அக்ஷார் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு 124 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 21.5 ஓவர்களில், எதுவித விக்கெட் இழப்புமின்றி வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில், இந்திய அணி சார்பாக, லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் நேற்று சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட பைஸ் பஸல் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் நாயகனாக ஜஸ்பிறிட் பும்ரா தெரிவானதுடன், தொடரின் நாயகனாக லோகேஷ் ராகுல் தெரிவானார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026