Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழங்களுக்கிடையே இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின், கடந்த சனிக்கிழமை (13) இடம்பெற்ற போட்டிகளில், செல்சி, சந்தர்லேண்ட், ஸ்டோக், வட்போர்ட், வெஸ்ட் புரோம், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன், நோர்விச், வெஸ்ட் ஹாம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
செல்சி, நியூகாசில் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 5-1 என்ற கோல்கணக்கில் செல்சி வெற்றி பெற்றது. இப்போட்டியில், செல்சி சார்பாக, போட்டியின் 5ஆவது நிமிடத்தில் டியகோ கோஸ்டாவும் போட்டியின் 9ஆவது, 59ஆவது நிமிடங்களில் பெட்ரோவும் போட்டியின் 17ஆவது நிமிடத்தில் வில்லியனும் போட்டியின் 83ஆவது நிமிடத்தில் பேர்ட்ரண்ட் ட்ரோரே ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர். நியூகாசில் சார்பாக பெறப்பட்ட கோலை அன்ட்ரோஸ் டௌன்சென்ட் பெற்றிருந்தார்.
இதேவேளை, மன்செஸ்டர் யுனைட்டெட், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்தது. யுனைட்டெட் சார்பாக பெறப்பட்ட கோலை அந்தோனி மார்ஷியல் போட்டியின் 39ஆவது நிமிடத்தில் பெற்றதோடு, சந்தர்லேண்ட் அணி சார்பாக, போட்டியின் 3ஆவது நிமிடத்தில் வஹ்பி ஹாசிரி கோலைப் பெற்றிருந்ததோடு, மற்றைய கோல், யுனைட்டெட்டின் கோல்காப்பாளர் டேவிட் டீ கியாவில் பட்டு, ‘ஒவ்ண்’ கோல் முறையில் கிடைத்திருந்தது.
ஏனைய போட்டிகளில், ஸ்டோக், 3-1 என்ற கோல்கணக்கில் பௌர்ண்மௌத்தை தோற்கடித்ததுடன், வட்போர்ட், 2-1 என்ற கோல்கணக்கில் கிறிஸ்டல் பலஸை தோற்கடித்ததோடு, வெஸ்ட் புரோம், 1-0 என்ற கோல்கணக்கில் எவெர்ற்றனை தோற்கடித்ததோடு, சௌதாம்டன், 1-0 என்ற கோல்கணக்கில் சுவான்சீயை தோற்கடித்ததோடு, நோர்விச், வெஸ்ட் ஹாம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .