2025 மே 19, திங்கட்கிழமை

டிசெம்பர் 16இல் ஐபிஎல் ஏலம்

Editorial   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் பங்கேற்பதற்கான ஏலத்தை டிசெம்பர் 16 ஆம் திகதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொரோனா காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டது. 2022-ம்ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே நகரங்களில் நடத்தப்பட்டன.

இந்நிலையில், 2023-ம்ஆண்டில் உள்ளூர் மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் டிசெம்பர் 16ஆம் திகதி ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X