Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஜனவரி 17 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஏற்கெனவே முதலாவது போட்டியில் வெற்றி பெற்றிருந்த தென்னாபிரிக்கா, இன்று முடிவடைந்த இரண்டாவது போட்டியிலும் வென்று, இன்னும் ஒரு போட்டியில் மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
செஞ்சூரியனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 335 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஏய்டன் மர்க்ரம் 94, ஹஷிம் அம்லா 82, அணித்தலைவர் பப் டு பிளெஸி 63 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின் 4, இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் விராத் கோலி 153 மற்றும் முரளி விஜய் 46, இரவிச்சந்திரன் அஷ்வின் 38 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மோர்னி மோர்கல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஏ.பி டி வில்லியர்ஸ் 80, டீன் எல்கர் 61, பப் டு பிளெஸி 48, வேர்ணன் பிலாந்தர் 26 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் ஷமி 4, ஜஸ்பிரிட் பும்ரா 3, இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, 287 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களையே பெற்று 135 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ரோகித் ஷர்மா 47, மொஹமட் ஷமி 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லுங்கி என்கிடி 6, கஜிஸ்கோ றபடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக லுங்கி என்கிடி தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
40 minute ago
48 minute ago