Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
டென்னிஸ் போட்டிகளில் சந்தேகத்துக்கிடமான போட்டிகள் குறித்து அவதானித்துவரும் டென்னிஸ் நாணயக் குழு, இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம், சந்தேகத்துக்கிடமான 48 போட்டிகள் குறித்து எச்சரிக்கைகளைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இது, 2015ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் அவ்வாறு கிடைக்கப்பெற்ற எச்சரிக்கைகளின் எண்ணிக்கையான 31உடன் ஒப்பிடும்போது, கணிசமான அதிகரிப்பாகும்.
இந்தப் போட்டிகளில் ஒரு போட்டி அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்தும் மற்றொரு போட்டி உலக டென்னிஸ் சங்கத் தொடரின் போட்டியிலிருந்தும் கிடைத்ததோடு, ஏனைய போட்டிகள், ஏனைய வகைப் போட்டிகளிலிருந்து கிடைத்துள்ளன.
சட்டரீதியான சூதாட்ட நிலையங்களில், சந்தேகத்துக்கிடமான முறையில் மேற்கொள்ளப்படும் சூதாட்டப் பந்தயப் பண வைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இது கணிக்கப்படுகிறது.
எனினும், இவ்வாறான சந்தேகத்துக்கிடமான எச்சரிக்கைகள், தவறு இடம்பெற்றமைக்கான உறுதியான ஆதாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago