2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

டெரன் பிராவோ விலகல்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரிலிருந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரரான டெரன் பிராவோ விலகியுள்ளார். எனினும், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று, இரண்டாம்நிலை அணியொன்றை அனுப்பும் நிலையை, மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்கொள்ளவில்லை.

சம்பள விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழாமிலிருந்து முக்கிய வீரர்கள் விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் 12 பேர், அத்தொடரில் பங்குபற்றுவதற்குச் சம்மதித்துள்ளனர்.

சுனில் நரைன், தனது பந்துவீச்சுத் தொடர்பில் இன்னமும் பயிற்சி தேவைப்படும் காரணத்தாலும், கெரான் பொலார்ட், உடற்தகுதிக் காரணங்களுக்காகவும் விலகினர். டெரன் பிராவோ, டெஸ்ட் போட்டிகளுக்காகத் தன்னைத் தயார்படுத்தும் நோக்கில், உள்ளூர் நான்கு-நாள் போட்டிகளில் பங்குபற்றும் விதமாக, உலக இருபதுக்கு-20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலகக் கிண்ணமொன்றில் மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கிடைத்த வாய்ப்புக்காக மிகவும் நன்றியுடையவராகவும் கௌரவமானதாகவும் உணர்வதாகத் தெரிவித்த அவர், டெஸ்ட் போட்டிகளில் கவனஞ்செலுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .