Shanmugan Murugavel / 2016 ஜூன் 01 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் கவனஞ்செலுத்துமுகமாகவே, இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
33 வயதான நுவான் குலசேகர, 2005ஆம் ஆண்டில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டதோடு, இலங்கைக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி, 49 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பின்னர் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் தன்னைச் சிறந்த பந்துவீச்சாளராக நிலைநிறுத்திக் கொண்ட நுவான் குலசேகர, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில், குறித்த காலத்துக்கு, முதல்நிலை வீரராகக் காணப்பட்டிருந்தார்.
ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அந்தளவுக்குத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்திருக்கவில்லை. இதன் காரணமாகவே, 11 ஆண்டுகளில் 21 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாட வேண்டியேற்பட்டது.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago