2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தங்க வீராங்கனை லெடக்கி

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற வீராங்கனையாக ரஷ்யாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான லரிசா லட்யினியாவுடன் தனது பெயரை ஐக்கிய அமெரிக்காவின் கேட்டி லெடக்கி பகிர்ந்து கொண்டுள்ளார்.

சனிக்கிழமை (03) நடைபெற்ற 800 மீற்றர் பிறீஸ்டைலில் தொடர்ச்சியாக நான்காவது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலமே குறித்த சாதனையை லெடக்கி படைத்துள்ளார்.

அந்தவகையில் நான்கு ஒலிம்பிக்குகளில் தங்கப் பதக்கம் வென்ற நீச்சல் வீரரான ஐக்கிய அமெரிக்காவின் மிஷெல் பெல்ப்ஸின் சாதனையையும் லெடக்கி சமப்படுத்தியுள்ளார்.  

இப்போட்டியில் அவுஸ்திரேலியாவின் அரியர்னே டிட்மஸ் வெள்ளிப் பதக்கத்தையும், ஐக்கிய அமெரிக்காவின் பேஜ் மடின் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .