Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 செப்டெம்பர் 17 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று (17 பிற்பகல் 3 மணிக்கு பிரேமதாசா மைதானத்தில் ஆரம்பமாகியது. . இதில், இந்தியா - இலங்கை விளையாடிக்கொண்டிருக்கின்றன.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டாலும், தற்போது மழை ஓய்ந்துள்ளது.
14 ஓவர்கள் நிறைவில் 45 ஆட்டங்களைப் பெற்றுள்ள இலங்கை அணி, எட்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 5 ஆண்டுகளாக பெரிய அளவிலான தொடர்களில் கிண்ணங்களை வென்றது இல்லை. கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய கிண்ண தொடரில் பங்களாதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த வெற்றிக்குப் பிறகு,நெருக்கடியான போட்டிகளிலும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்தியாவால் வெற்றி பெற முடியாமல் போனது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ண மற்றும் 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2019-ம் ஆண்டு நியூஸிலாந்திடமும், 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு இருந்தது.
இந்திய அணியின் கோப்பை வறட்சிக்கு இம்முறை ஆசிய கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தீர்வு காணக்கூடும் என எதிர்பார்க்ப்படுகிறது.
சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தியநிலையில் கடைசி ஆட்டத்தில் பங்காளதேசத்திடம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. 7 முறை சாம்பியனான இந்திய அணி இம்முறை வெற்றி பெற்றுகோப்பையை வெல்லும் பட்சத்தில் அடுத்த 3 வாரங்களில் தொடங்க இருக்கும் ஐசிசி 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பெரிய உந்துதலையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் நிலை தற்போது பெரும் கேள்விக்குறியாகி விட்டது. அடுத்தடுத்து வீழ்ந்த விக்கட்டுக்களால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மைதானத்தில் இருக்கும் இலங்கை அணியின் ர சிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர்.
இந்திய அணி வீரர் மொஹமட் சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மிகவும் குறைந்த ஓட்டங்களுக்குள் இலங்கை அணி மட்டுப்படுத்தப்படக்கூடும் என்று அறியமுடிகின்றது. பெரும் சிரமத்துக்கு முகங்கொடுத்துக்கொண்டே இலங்கை அணியினர் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
40 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
53 minute ago