2026 மே 02, சனிக்கிழமை

தனது சாதனையை முறியடித்த எதியோப்பியாவின் அசீஃபா

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டன் மரதனை ஞாயிற்றுக்கிழமை (26) வெல்கையில், பெண்களுக்கான தனது சொந்த சாதனையை எதியோப்பியாவின் திக்ஸ்ட் அசீஃபா முறியடித்தார்.

கடந்தாண்டு இலண்டனில் தான் கடந்த சாதனைக்குரிய நேரமான 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் 50 செக்கன்கள் நேரப் பெறுதியை ஒன்பது செக்கன்களால் 29 வயதான அசீஃபா முறியடித்துள்ளார்.

கென்யாவின் ஹெலன் ஒபிரி, அசீபாவை விட 12 செக்கன்கள் பின்தங்கி இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், ஜொசிலின் ஜெப்கொஸ்கெய் 14 செக்கன்கள் பின்தங்கி மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .