2025 ஜூலை 05, சனிக்கிழமை

தரவரிசையில் ஆறாமிடத்துக்கு முன்னேறினார் வில்லியம்சன்

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்துக்கு, நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார்.

உலகக் கிண்ண அரையிறுதி, இறுதிப் போட்டிகளின் பெறுபேறுகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இத்தரவரிசையில் அரையிறுதியில் 67, இறுதிப் போட்டியில் 30 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே எட்டாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தை வில்லியம்சன் அடைந்துள்ளார்.

இதேவேளை, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் முறையே 85, 17 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜேஸன் றோய், 13ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையில், உலகக் கிண்ணத்தில் 71.88 என்ற சராசரியில் மூன்று சதங்கள், மூன்று அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 647 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும் அரையிறுதிப் போட்டியில் பிரகாசிக்காத டேவிட் வோணர், 61.77 என்ற சராசரியில் இரண்டு சதங்கள், மூன்று அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 556 ஓட்டங்களைப் பெற்றபோதும், அரையிறுதிப் போட்டியில் 49 ஓட்டங்களை பெற்றும் இறுதிப் போட்டியில் பிரகாசிக்காத நிலையில் இருவரும் முறையே ஆறாம், ஏழாம் இடங்களிலிருந்து ஏழாம், எட்டாம் இடங்களுக்கு கீழிறங்கியுள்ளனர்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்கள் பின்வருமாறு,

  1. விராத் கோலி, 2. ரோஹித் ஷர்மா, 3. பாபர் அஸாம், 4. பப் டு பிளெஸி, 5. றொஸ் டெய்லர், 6. கேன் வில்லியம்சன், 7. டேவிட் வோணர், 8. ஜோ றூட், 9. குயின்டன் டி கொக், 10. ஜேஸன் றோய்

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ், 13ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையில், அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் மற் ஹென்றி, 15ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. ட்ரெண்ட் போல்ட், 3. ககிஸோ றபாடா, 4. பற் கமின்ஸ், 5. இம்ரான் தாஹீர், 6. முஜீப் உர் ரஹ்மான், 7. கிறிஸ் வோக்ஸ், 8. மிற்செல் ஸ்டார்க், 9. ரஷீட் கான். 10. மற் ஹென்றி

முதல் 10 அணிகளின் தரவரிசை பின்வருமாறு,

  1. இங்கிலாந்து, 2. இந்தியா, 3. நியூசிலாந்து, 4. அவுஸ்திரேலியா, 5. தென்னாபிரிக்கா, 6. பாகிஸ்தான், 7. பங்களாதேஷ், 8. இலங்கை, 9. மேற்கிந்தியத் தீவுகள், 10. ஆப்கானிஸ்தான்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .